'ரத்தன் தியாகி' என போலியாக பெயர் வைத்துக்கொண்டு 13 வயது பெண்ணிடம் பழகி பாலியல் கொடுமை செய்த 'மர்ம நபர்'

Update: 2022-04-13 12:00 GMT

ஹரித்வாரில் சாதிக் என்ற இஸ்லாமியர் 13 வயது மைனர் பெண்ணை 'ரத்தன் தியாகி' என பெயர் வைத்துக்கொண்டு தான் ஒரு இந்து என்பது போல் காட்டிக் கவர்ந்து பலாத்காரம் செய்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.


மைனர் பெண்ணுடன் நட்பாக பழகி பின்னர் மிரட்டி பலாத்காரம் செய்த சாதிக் என்ற இளைஞரை ஹரித்வார் போலீஸார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 10'ம் தேதி இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, சாதிக் என்ற இஸ்லாமிய நபர் இந்து பெண்ணை கவருவதற்காக 'ரத்தன் தியாகி' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் இருவரும் பழகிய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள விஷன்பூர் குண்டியில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது, ராஜா என்ற ரத்தன் தியாகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சாதிக், பள்ளியில் இருந்து திரும்பும் போது தன்னை பின்தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். இது சில காலமாக நடந்து தொடர்ச்சியாக நடந்து வருவதாகவும் அந்த பாதிக்கப்பட்ட சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார்.




 

சாதிக் சிறுமியை நயமாக பேசி மயக்கி, பின்னர் சிறுமியின் பல்வேறு அந்தரங்க படங்களை பதிவு செய்ததாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டியதாகவும், அந்த சிறுமி தன்னுடன் பேச மறுக்கும் போதெல்லாம் சாதிக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசியவிடுவதாக மிரட்டி பாலியல் கொடுமை செய்ததாகவும் அந்த பெண்ணின் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மூடப்பட்டதால், பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி சாதிக் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து துன்புறுத்தி வந்தார். சாதிக் கடந்த 4-5 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோரைக் கொன்றுவிடுவதாகவும், தன்னுடன் வராவிட்டால் அவரது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்குவதாகவும் மிரட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் 'ராஜா என்ற ரத்தன் தியாகி' என்ற பெயரில் இருந்ததை பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் நேரில் பார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர். போலீசார் விசாரணை தொடங்கும் வரையில், குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையில் சாதிக் என்பது தெரியவந்தது, அவர் உத்தரகாண்டில் உள்ள கர்வால் மாவட்டத்தின் லான்ஸ்டவுன் தெஹ்சில் பகுதியில் உள்ள சந்த்பூர் கிராமத்தில் வசிக்கிறார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


Source - Opindia.com

Similar News