கும்பமேளா தொடங்கிய 15 நாட்களில் 15 கோடி பக்தர்கள் புனித நீராடல்:களைகட்டும் உத்திரபிரதேசம்!

Update: 2025-01-31 12:43 GMT

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடந்த வருகிறது இந்த நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை அதாவது 45 நாட்களுக்கு களை கட்டவுள்ளது 

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மிகவும் பழமையான இந்தியாவின் பழமையான கலாச்சார மற்றும் மத பாரம்பரியங்களை உலக அளவில் எடுத்துக் கூறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ள இந்த பெருமைமிக்க மகா கும்பமேளாவிற்கு கிட்டத்தட்ட 40 கோடி பக்தர்கள் வருகை தருவதாகவும் இதன் மூலம் இரண்டு லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகின்ற மகா கும்பமேளா தொடங்கப்பட்டு முதல் 15 நாட்களில் இதுவரை 15 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் கங்கை யமுனை சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாகவும் தற்போது இதுவரை 15 கோடி பக்தர்கள் இங்கு புனித நீராடி உள்ளனர் 

Tags:    

Similar News