ஈரானில் இந்தியர்களுக்கு தூதரகம் பாதுகாப்பு அறிவுறுத்தல்!!

By :  G Pradeep
Update: 2026-01-17 11:44 GMT

ஈரானில் வாழ்ந்துவரும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகச் செய்திகளை கண்காணிக்கவும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஈரானில் இணைய தடங்கல்கள் காரணமாக பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Tags:    

Similar News