அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு! 18 ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கம்!

Update: 2024-03-14 09:06 GMT

தொடர்ந்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் இங்கி வந்த 18 ஓடிடி தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை முடக்கி உள்ளது. 

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-த்தின்படி விதிமுறைகளை மீறி மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 18 ஓடிபி தளங்களையும் அதன் 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக பக்கங்களையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை நாடு முழுவதும் முடக்கி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. 

அதன்படி, X prime, Uncut Adda, Tri Flicks, Fugi, Dreams films, Voovi.போன்ற 18 ஆபாச ஓடிடி தளங்களையும் முடக்கியுள்ளது. மேலும் முடக்கப்பட்ட ஒரு ஓடிடி தளத்தின் செயலி மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் வேறு இரண்டு செய்திகள் 50 லட்சம் முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News