இந்தியாவில் கொரோனா 2வது அலை: வெள்ளை மாளிகையின் சார்பாக அமெரிக்கத் துணை அதிபர் வருத்தம்!

Update: 2021-05-09 12:08 GMT

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பாதிப்புகளில் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது அதே சமயத்தில் பல்வேறு மருத்துவ பயன்பாடு பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா இந்தப் பெரும் தொற்றிலிருந்து மீளவேண்டும் என்று பல உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக பல்வேறு உதவிகளை செய்துள்ளனர் அவற்றில் தற்போது, அமெரிக்காவும் தன்னுடைய சார்பாக மருந்துப் பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் தற்பொழுது இந்தியாவில் உள்ள இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையை குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


இது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் கூறுகையில், " இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது அது என்னுடைய இதயத்தை துளைக்கும் ஒரு செயலாக இருக்கிறது. மேலும் இந்தியாவினுடைய நலன் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியம்" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தலைமையில் ஆன அரசாங்கம் தேவையான நேரத்தில் இந்தியாவிற்கு உதவுவதற்கு கட்டாயம் முன் வரும் என்றும் அவர் கூறினார். மேலும் முழு அரசாங்கமும் இந்தியாவிற்கு உதவுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் விவரித்தார். 


மேலும் அவர் கூறுகையில், நோய்த் தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா உதவிகளை செய்தது. இன்று இந்தியாவிற்கு ஒரு உதவி தேவைப்படுகிறது என்றால், நிச்சயம் அதை நட்புடன் நோக்கத்துடன் செயல்பட்டு அணுக அமெரிக்கா முன்வந்துள்ளது. நண்பர்களாகவும் மற்றும் ஆசிய குவாட் குழு உறுப்பினர்களாகவும், சமுதாயத்தின் ஒரு பகுதியாகவும் இந்த உதவிகளை செய்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இந்த தொற்று நோயை வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

Similar News