ரத்து செய்யப்படும் வரி தொடர்பான பழைய வழக்குகள்! 2024 - 25 இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதில் பல புதிய திட்டங்கள் குறித்து அறிவித்திருந்தார் அதில் சில:
2 கோடி வீடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கட்டி தரப்படும், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக அமைப்பது குறித்து குழு அமைக்கப்படும், வீட்டு மொட்டைமாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பதற்கு புதிய தடுப்பூசிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூபாய் ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஆஷா பணியாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு திட்டம், கடல் சார் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவை பால் உற்பத்தியில் முதலிடம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜ் மையங்கள் நாடு முழுவதும் அதிகரிக்கப்படும், ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ஒதுக்கப்படும்! மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாகும் இலக்கை நிர்ணயித்து வரும் ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மூன்று கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவார்கள். நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு பிரத்தியேக அமைப்புகளும் ஏற்படுத்தப்படும், மேலும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுலா மேம்பாட்டிற்காக வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதோடு ரூபாய் 25000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகளை ரத்து செய்வதாகவும் இதன் மூலம் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu Tamil thisai