வனமாகும் திருப்பூர்:2025குள் 25 லட்சம் மரங்கள் நட இலக்கு!பாராட்டு தெரிவித்த அண்ணாமலை!
வனத்திற்குள் திருப்பூர் அமைப்பானது உண்ணா ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக தொடங்கப்பட்டது மேலும் இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 22 லட்சம் மரங்களை இட்டு சாதனை படைத்துள்ளது இதனை சிறப்பிக்கும் வகையில் வனத்திற்குள் திருப்பூர் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தினமலர் நாளிதழில் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்
மேலும் இந்நிகழ்ச்சி குறித்து நமது முன்னாள் ஜனாதிபதி அமரர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது மேலும் இந்த 2025 ஆம் ஆண்டு நிறைவைடையும்போது 25 லட்சம் மரங்கள் என்ற உயரிய இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக வெற்றி அறக்கட்டளை வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவராம் அவர்கள் கொடையாளர்கள் தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மேலும் திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும் அருகிலுள்ள மாவட்டங்களை உள்ளடக்கி சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு பரவியுள்ளது பாராட்டத்தக்கது சூழலியல் மாற்றத்தைச் சரி செய்ய மரங்களால் மட்டும்தான் முடியும் எனவே இந்த மரம் நடும் பணி இன்னும் பல மாவட்டங்கள் மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டும் இளைஞர்கள் அனைவரும் இதற்காக முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்