நதிநீர் இணைப்பிற்கு 2.5 லட்சம் கோடி நிதி...விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி!

Update: 2024-03-28 08:18 GMT

நேற்று கோவை ஜெயின் கிளப்பில் விவசாயம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளுடன் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கோவையில் ஏன் பாஜக எம்பி வேண்டும் என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசி உள்ளார். 

அதில், சிலர் அரசியலுக்கு வராமல் இருந்தாலும் அரசியலை கவனித்துதான் வருகிறார்கள் பல தொழில் செய்பவரும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உற்று நோக்கி வருகிறார்கள், மேலும் 50 ஆண்டு காலமாக நீங்கள் சந்தித்த பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளீர்கள் அதன் மூலமே எங்கள் மீதாக நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை புலப்படுகிறது! 

தமிழ்நாட்டில் பாசன வசதி நிலமானது 1963க்கு பிறகு 14% சுருங்கி உள்ளது விவசாயத்திற்கு வரவேண்டிய பல திட்டங்கள் நன்மைகள் வரவில்லை! பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரும்பொழுது, 2.5 லட்சம் கோடி ரூபாய் செலவு நதிநீர் இணைப்பை செய்ய உள்ளது பாஜக அரசு. 

பத்தாயிரம் கோடி ரூபாய் ஆனைமலை நல்லாறு திட்டத்திற்கு தேவைப்படுகிறது அந்த கோரிக்கையையும் மத்திய அரசிடம் கொண்டு சேர்த்து அதற்கான நிதியை பெற்று தருவோம். மேலும் 970 கோடி ரூபாயை நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய கோவைக்கு மத்திய அரசு அளித்துள்ளது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் நிதி அளித்துள்ளது என கோவைக்கு இதுவரை மத்திய அரசு வழங்கிய திட்டம் குறித்தும் வழங்கு உள்ள திட்டம் குறித்தும் கோவையில் உள்ள குறைகளை பற்றியும் பேசினார். 

Source : Dinamalar

Similar News