தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் திமுகவின் சொத்து பட்டியலின் ஒன்று மற்றும் இரண்டு என 2 பாகங்களை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து திமுக எம்பி ஆ ராசா மற்றும் தமிழக முன்னாள் உளவுத்துறை தலைவர் ஜாபர் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த ஆடியோ பதிவையும் இரண்டு கிளிப்புகளாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக மூன்றாவது ஆடியோவையும் நேற்று வெளியிட்டார்.
அதில், சிபிஐ விசாரணை ஆ. ராசாவிடம் எப்படி நடைபெற்றது அவர்கள் என்ன கேள்விகளை கேட்டார்கள் அதற்கு எப்படி ஆ ராசா பதிலத்து வெற்றிகரமாக விசாரணையை முறியடித்தார் என்பதும் கட்சிக்கு ஆ. ராசா கொடுத்த பணம் குறித்தும் அவர் பலருக்கு பல காரணத்திற்காக கட்சிக்கு கொடுத்த பணம் குறித்தும் அந்த உரையாடலில் தெளிவாக ஆ ராசா பேசிக் கொள்வது இடம் பெற்றுள்ளது.
அதில், வங்கிக் கணக்கு அல்லது பண பரிவர்த்தனைகள் மூலம் நான் பொதுமக்களிடமிருந்தோ அல்லது எனக்குத் தெரிந்தவர்களிடமிருந்தோ பணத்தை சேகரித்து மாவட்ட அலகுகளுக்கு கொடுத்துள்ளேன் என்பதைக் காட்ட "முரசொலி பெயரில் ₹ 70 முதல் 80 லட்சம் வரை உண்டியல்கள், 'தலைவர்' பிறந்தநாளுக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தேன் அதற்காக ஒரே பணமாக ₹1 கோடி செலுத்தியிருந்தேன் மற்றும் மாவட்ட திமுக பெயரில் கனரா வங்கியில் கணக்கு தொடங்கினோம். அதில் நாங்கள் ₹1 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளோம்" இந்த மூன்றும் என்னிடம் உள்ளன என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பல தகவல்களை ஆ. ராசா ஜாபர் சேட்டுடன் பகிர்ந்து கொண்டது தற்போது அறிவாலயத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளது.
Source : The Commune