நக்சல்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு! 3 முக்கிய தலைவர்கள் உட்பட சரணடைத்த 37 நக்சல்கள்!
மத்திய அரசு நக்சல்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற சில மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நக்சல் அமைப்பில் உள்ளவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆயுதங்களை தரையில் போட்டு சரண் அடைந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது 37 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு அன்றாட வாழ்க்கையில் வாழ்வதாக கூறி சரணடைந்துள்ளனர். இதில் பெண்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பை சேர்ந்த 37 பேர் சரண் அடைந்திருப்பதாகவும் அதில் மூன்று பேர் மிகவும் முக்கியமான மூத்த நபர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தெலுங்கானாவில் 59 பேர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை தாண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தலைமறைவாக இருப்பவர்களுக்கு சரண் அடைந்து அமைதியான வாழ்க்கையை வாழுமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சரண் அடைந்தவர்களிடம் இருந்து நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், 330 ரக துப்பாக்கிகள் 4, 2 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி, ஜி3 வகை துப்பாக்கி மற்றும் 343 தோட்டாக்கள் போன்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.