சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.... இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
2024 - 2025 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்யும் சாதனையை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பொழுது பல புதிய திட்டங்கள் குறித்து தெரிவித்தார் அதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சமூக வலைதள பக்கத்தில்,
வளர்ச்சிப் பாதையில் இந்தியா"
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளது; ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
11.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது; 4 பிரிவினரின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முக்கிய குறிக்கோள். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்; சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.
வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதால் வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களிலேயே தரப்படுகிறது .
மக்களின் வருவாய் 50% வரை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து மாநிலங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றன; பணவீக்கத்திற்கு இடையிலும் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா சிறப்பாக வகித்தது. மத்திய கிழக்கு தொழில் பெருவழித்தட திட்டம் வரலாற்றில் மைல் கல்லாக அமையும். பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது"
ஜி.ஸ்.டி மூலமாக ஒரே நாடு... ஒரே வரி... ஒரே சந்தை... என்ற நிலை ஏற்பட்டுள்ளது; அனைத்து உள்கட்டமைப்புகளும் வரலாறு காணாத வேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என பட்ஜெட் தாக்கலின் பொழுது நிதி அமைச்சர் கூறிய நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.