மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மொபைல் சேவை நிறுவனமானது அதிக இடங்களில் மொபைல் டவர்களே இல்லாமல் இருந்து வந்தது. ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கும் பணியில் மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில் அந்தப் பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி இணைய சேவையை வெற்றிகரமாக தொடங்கி வைத்தார். 92,600 இடங்களில் இச்சவையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 97,500 டவர்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சேவை கட்டமைப்பிற்கு ₹37,000 செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் 5ஜி அளவிற்கு பிஎஸ்என்எல் சேவையின் தரம் உயர்த்திக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல கிராமங்களில் தொலை தொடர்பு வசதிகளே இல்லாமல் இருந்த நிலையில் 26700 கிராமங்களில் 4ஜி சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக 20 லட்சம் பெயர் இந்த வசதியை பெற்றிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
லேசர் மூலம் இதற்கான மின்சார பயன்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 ஜி ஸ்வதேசி இணைய சேவை மூலம் இந்தியா தன்னிறைவு பயணத்தில் செல்லும் என்று பிரதமர் மோடி தொடக்க விழாவில் பேசினார்.