தேசிய பசுமை ஹைட்ரஜன்: ரூ.400 கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டம்..
ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை முன்னிட்டு, பசுமை மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரமாக ஹைட்ரஜனின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பயன்படுத்த இந்திய அரசு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது.
ரூ.400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் பசுமை ஹைட்ரஜனை வணிகமயமாக்கவும், இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிக்கவும் உதவும் ஒரு துடிப்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டலை வழங்க முயல்கிறது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் வெளியிட்ட காணொலி செய்தியில், "ஹைட்ரஜன் ஏராளமாக உள்ளது, இது நமது எரிசக்தி நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தும், காலநிலை மாற்றத்தையும் தணிக்கும். மேலும், தூய்மையான ஆற்றலுடன் நமது பொருளாதாரங்களுக்கு சக்தியளிக்கும் திறனை அது கொண்டுள்ளது.
இந்த உலக ஹைட்ரஜன் தினத்தில், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தலுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஆற்றல் மாற்றத்தில் ஹைட்ரஜனை ஒரு முக்கிய எரிபொருளாக ஏற்றுக்கொள்ள நமது தொழில்கள் மற்றும் சமூகங்களை ஊக்குவிப்போம்,” என்று கூறினார்.
Input & Image courtesy: News