தமிழகத்தில் மட்டும் 41,000 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் - வஞ்சம் இல்லாமல் வாரி வழங்கும் மோடி அரசு!

தமிழகத்திற்கு 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-02 10:15 GMT

தமிழகத்தில் ரூபாய் 41,000 கோடி மதிப்பீட்டில் 943 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .இதில் நிகழ்   நிதி ஆண்டில் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் 285 கிலோ மீட்டர் சாலை திட்டங்கள் முன்முடியப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் ஏ.வ வேலு மற்றும் தமிழக அதிகாரிகளுடன் தில்லியில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை ஆய்வு கூட்டத்தை நடத்தியது .மத்திய நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் அஜய் டாம்டா மற்றும் மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் இணையுள்ள 1031 கிலோமீட்டர் தூரமுள்ள 35 நெடுஞ்சாலை திட்டங்களில் முன்னேற்றம் குறித்து அமைச்சர் நிதின் கட்கரி மதிப்பாய்வு செய்தார்.பின்னர் அவர் பேசியது வருமாறு:-

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 689 கிலோமீட்டர் .இதில் NHAI தூரம் 5902கி.மீ. இதில் 38 ஆயிரம் கோடி மதிப்பிலான மூவாயிரத்து தொண்ணூறு கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் ரூபாய் 41 ஆயிரம் கோடி மதிப்பில் 943 கிலோமீட்டருக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் 88 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க 3,627 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News