
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உடன் இந்தியாவிற்கு ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் இரு நாடுகளுக்கான ஏற்றுமதிகள் முறையே 27 மற்றும் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பல ஏற்றுமதியில் 47.50 சதவிகிதம் அதிகரித்துள்ளது மேலும் பல பழ ஏற்றுமதிக்கான புதிய சந்தைகள் குறித்து ஆராயப்பட்டும் வருகிறதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார்
மேலும் மாம்பழம் திராட்சை வாழை ஆப்பிள் அன்னாசி மாதுளை மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன அதோடு நம் நாட்டின் பழங்களின் தரம் சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதி செய்யவும் பூச்சிக்கொல்லிகள் அளவுகளில் மிக குறைந்தபட்ச வரம்புகளை உறுதி செய்வதிலும் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என கூறியுள்ளார்