மார்ச் 5 இல் தமிழகம் வருகிறார் பிரதமர்! இந்த முறை மூன்று நாள் பயணம்!

Update: 2024-03-11 10:08 GMT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் நான்காம் தேதி சென்னை திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன்பாக என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். மேலும், குலசேகரபட்டினத்தில் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இதனை அடுத்து தற்போது மார்ச் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் பிரதமர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு 15 ஆம் தேதி சேலத்திலும், கன்னியாகுமரிக்கு 16ஆம் தேதியிலும், கோவையில் பதினெட்டாம் தேதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. 

லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் தற்போது தமிழகத்திற்கு வருகை தரவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Source : Dinamalar 

Similar News