ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் ஒரு தமிழர் கூட இல்லை - அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Update: 2021-09-25 06:30 GMT

தமிழகத்தில் இருந்து இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் முதல் இடங்களை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என் தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.

நேற்று இந்திய ஆட்சிப்பணிக்காக ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேராசியரும், பா.ஜ.கவின் ஆவணப்படுத்துதல் மற்றும் நூலகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்.ஆசீர்வாதம் ஆச்சாரி அவர்களின் ட்விட்டர் பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இன்று ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் இடம் பெறுவர். ஆனால், இப்பொழுதெல்லாம் முதல் 50 இடங்களில் கூட நம்மவர்கள் இல்லை. என்ன காரணம்?" என தமிழகத்தின் அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதில் நேற்றை தினத்தில் இந்திய ஆட்சிப்பணிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள முதல் 50 நபர்களின் பெயர்களையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.


இதற்கு முன்னர் முதல் பத்து இடங்களில் கண்டிப்பாக தமிழர் ஒருவராவது இடம் பெறுவர். ஆனால் அந்த நிலை தற்பொழுது தலைகீழாக மாறி முதல் 50 இடங்களில் கூட ஒரு தமிழர் இல்லாத நிலையை அடைந்துள்ளது. இது இப்படியே போனார் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்திய ஆட்சிப்பணியில் இடம் பிடிப்பது அரிதாகிவிடும்.

Similar News