பூட்டானை கைப்பற்ற நினைக்கிறதா சீனா.. இந்திய எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவில் ராணுவ முகாம்..

Update: 2023-12-14 01:20 GMT

பூடானுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளைத் தொடர்வதை சீனா தற்போது வரை நிறுத்தவில்லை. பூட்டானின் கிழக்கு எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் சீனர்களால்  தங்களுடைய பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகளை நிலைநாட்டி இருக்கிறார்கள். குறிப்பாக இதை ஏற்றுக் கொள்வதை தவிர பூட்டானுக்கு வேறு வழி கிடையாது. இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கும் பூட்டானின் எல்லையை தனக்கு சாதகமாக பயன்படுத்த சீனா முயற்சி செய்வதாகவும் கருத்துக்கள் எழுகிறது.


குறிப்பாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களும் தெளிவான ஒரு விழிப்புணர்வை பூட்டானுக்கு அளிக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட படத்துடன் தற்போது எடுக்கப்பட்ட படத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பெரும் பான்மையான பகுதிகளை சீனா தங்களுடைய ஆக்கிரமிப்புகளை நிலைநாட்டி இருக்கிறது. குறிப்பாக சீனாவை சேர்ந்த கிராம மக்கள் மேய்ச்சலுக்காக அந்த பகுதியை பயன்படுத்தி வந்தார்கள். பிறகு அதை பயன்படுத்தி சீன ராணுவமும் தன்னுடைய ராணுவ முகாம்கள் கிராமங்கள் மற்றும் புற காவல் நிலையங்கள் ஆகியவற்றை அங்கு ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


பூட்டானியர்களுக்கு முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பகுதியான பெயுல் கென்பஜோங்கை ஜகர்லுங் ஒட்டியுள்ளது. இந்த பகுதியை சீனா எளிதாக கைப்பற்றினால் பூட்டான் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவை அவர்கள் விரைவாக நெருங்க முடியும் என்று விரும்புவதாகவும் ஒரு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் சுமார் 127-க்கு அதிகமான கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டு இருப்பதாகவும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News