அமெரிக்கா இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட 50% இறக்குமதி வரி குறைய போகிறதா??
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இதற்கு முன்பாக 25% இன்று இறந்த நிலையில் மேலும் 25 % மாற்றி தற்பொழுது 50% என அமெரிக்கா விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது அமெரிக்கா இந்தியாவின் மீது விதித்துள்ள 50% வரி விரைவில் நீக்கப்படும் சூழல் இருப்பதாக கூறினார்.
இரு நாடுகளும் நடத்தும் பேச்சுவார்த்தையில் வெற்றி பெற்றால் வர்த்தக கட்டுப்பாடுகளிலிருந்து சில தளர்வுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இது போன்ற வரி அதிகரிப்பு ஏற்பட்டதாகவும், தற்பொழுது சில முன்னேற்றங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்கு மேல் அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் வரியை திரும்பப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனைக்கு அடுத்து வரும் சில மாதங்களில் தீர்வு காணப்படும். இதனால் வர்த்தகத்தில் எளிமையும் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவு மேம்பாடும் இருக்கும். இந்தியாவில் தற்பொழுது வரை ஏற்றுமதி சீராக நடந்து வருவதாகவும், ஆண்டுக்கு 850 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதியில் உள்ளதாகவும் இன்னும் சில ஆண்டில் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வலுப்படும் என்று கூறப்படுகிறது.