நாட்டின் கிரீடமாக விளங்கும் ஜம்மு காஷ்மீர், ரூ. 6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்!

Update: 2024-03-07 10:26 GMT

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் ரூபாய் 6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் காஷ்மீருக்கு சென்றுள்ளார். காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு விமானத்தின் மூலம் சென்ற பிரதமர் ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைத்தளத்தில் உள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 


அதற்குப் பிறகு ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ரூபாய் 6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.


மேலும் உங்கள் இதயங்களை வெல்வதற்காகவே காஷ்மீர் வந்துள்ளேன், 140 கோடி இந்தியர்கள் பாஜக ஆட்சியில் அமைதியாக வாழ்கிறார்கள் ஜம்மு காஷ்மீரும் நாட்டின் கிரீடமாக திகழ்கிறது என்று வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற தலைப்பில் பேசியுள்ளார். 

Source : Daily Thanthi 

Similar News