டிக்-டாக் உள்ளிட்ட 8 சீன ஆப்கள் மீதான தடையை நீக்கிய அமெரிக்கா!

Update: 2021-06-11 12:40 GMT

உலக அளவில் பெரும்பான்மையான மக்களை தன்னுடைய பக்கம் கவர்ந்து அவற்றிற்கு அடிமையாகி விட்டது என்று சொல்லுமளவிற்கு டிக் டாக் செயலி இருந்து வந்தது. ஆனால் உலகில் பெரும் நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டிற்கு தடை விதித்தது. அதில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இத்தகைய ஆப்களுக்கு தடைகள் விதித்து இருந்தன. சீனாவின் 8 செயலிகள் மீதான தடையை திரும்பப்பெற்றதாக அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


சீனாவின் டிக்-டாக் மற்றும் V சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய உத்தரவுகள் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் V சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இருப்பினும் திடீர் திருப்பமாக டிக்-டாக் மற்றும் V சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது. டிக்டாக், வி சாட் மட்டுமின்றி சீனாவின் 8 செயலிகள் மீதான தடையையும் திரும்ப பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News