நடிகர் சூர்யாவிற்கு பிரபல பெண் நடன இயக்குனர், ஜோதிகா முன்னிலையில் காதல் கடிதம் கொடுத்த விவகாரம் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
தமிழில் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வருபவர் சூர்யா, இவர் நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். இவர் சக நடிகை ஜோதிகாவை காதலித்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சூர்யா ஜோதிகா காதல் செய்யும் தருணத்தில் ஜோதிகா முன்னிலையில் பிரபல நடன இயக்குனர் ஒருவர் நடிகர் சூர்யாவிற்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடன இயக்குனர்களில் ஒருவரான பாபி ஒருவர் பேட்டியளித்திருந்தார். அதில், "காக்க காக்க" படத்தில் நடிகர் சூர்யா உடன் பணிபுரியும் பொழுது ஒரு நாள் நடிகர் சூர்யாவிற்கு ஒரு பேப்பரில் 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் உங்களை காதலிக்கிறேன்' என எழுதிக் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அருகிலிருந்த ஜோதிகா உட்பட பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனே சுதாரித்துக் கொண்ட நடிகை ஜோதிகா "என்ன பாபி என்கிட்ட சொல்ல மாட்டியா" என கிண்டல் செய்ததாக கூறி உள்ளார். இந்த விவகாரம் தற்போது அவர் பேட்டியில் கூறியது இணையத்தில் வைரலாகி பரபரப்பாகி வருகிறது.