தமிழ்நாட்டில் வரிசையாக NIA வசம் சிக்கும் மர்ம நெட்வொர்க்! கோவை சம்பவத்தில் இவ்வளவு சதிவேலையா?
என் ஐ ஏ நெருங்கியது... நீளும் சதிகாரர்கள் பட்டியல்..
கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த விவகாரம் தொடர்பான செய்தி மக்கள் மத்தியில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் என்றும் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தது சமூகத்தில் ஒரு பதட்ட நிலையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாக தமிழக போலீசார் இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர் அதற்குப் பிறகு இந்த வழக்கு குறித்த விசாரணை என் ஐ ஏ விற்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபீனின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது இருப்பினும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் ஜமாத்துக்கள் முன்வராமல் மறுப்பு தெரிவித்தனர். அதற்குப் பிறகு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு விசாரணைகளிலும் என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் அவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவரை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப்படி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள 14ஆவது குற்றவாளி என்பவர் போத்தனூர் திருமலை நகரைச் சேர்ந்த தாஹா நசீர். இவர் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கோவையில் ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவல் இவருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நசிரை கைது செய்து அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தால் உயிரிழந்த ஜமீசா முபின் வீட்டை அதிகாரிகள் சோதனை இட்ட பொழுது 75 கிலோ வெடி மருந்துகளை சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த பதற்ற நிலை தமிழக முழுவதும் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக ஜமுசா முபினின் தீவிரவாத செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உதவியாளர்களாக இருந்த முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.