உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கின்ற நிலை உருவாகியிருப்பதால் அங்கு வசித்து வந்த இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு கூறியது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 1000 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இருக்கும் பலர் மாணவர்கள் எனவும் சிலர் மட்டும் வேலைக்காக சென்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பி. அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். தமிழர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi