11 நாட்கள் இளநீர் மட்டுமே, தரையில் உறக்கம்.... சாதித்துகாட்டிய அரசியல் துறவி....!

Update: 2024-01-25 02:46 GMT

2019 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அயோத்தியில் ராமருக்கான கோவில் கட்டுவதற்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது இதனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பரபரப்பாகவும் மும்முரமாகவும் பிரம்மாண்டமாகவும் கட்டப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் தற்பொழுது கும்பாபிஷேக விழா உடன் திறக்கப்பட்டு இருப்பது உலக மக்கள் அனைவரிடத்திலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கும்பாபிஷேக விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டு ராமர் கோவிலின் திறப்பு விழா குறித்து அழைப்பிதழ்கள் ஸ்ரீ ராமஜென்ம தீர்த்த கேஷதிர அமைப்பின் மூலம் நாட்டில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் முன்னணி தொழில் அதிபர்களுக்கும் திரை நட்சத்திரங்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கும்பாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புனித தலங்களில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டதும் அவை அனைத்தும் அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் செய்திகளில் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது அதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தான் நாட்டு மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக அயோத்தி ராமர் கோவிலின் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்துள்ளார்

.

இப்படி 500 வருட காலத்திற்குப் பிறகு ராமர் அயோத்திக்கு வருகிறார் என்ற ஒரு வரலாற்று நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தான் ராமரை பிரதிஷ்டை செய்தார், அதற்கு முன்பாக குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வதற்கு முன் 11 நாட்களுக்கு விரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. 



அதாவது கடந்த ஜனவரி 12ஆம் தேதி அன்று பிரதமர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாட்டை தொடங்குகிறேன் என்றும் விரதத்தை மேற்கொள்ள இருக்கிறேன் என்பதையும் கூறினார். அந்த நிலையிலிருந்து பிரதமர் கடுமையான விரதங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார் இளநீர் மற்றும் தரையில் படுத்து அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த 11 நாட்களும் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினார். 


முதலில் கேரளா சென்று குருவாயூர் பகுதியில் உள்ள குருவாயூரப்ப சுவாமியை தரிசித்து விட்டு அங்கிருந்து தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி முதலில் திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி தரிசித்துவிட்டு அங்கு கம்பராமாயணத்தையும் கேட்டு மகிழ்ந்தார் அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாத ஸ்வாமியை தரிசித்து விட்டு அன்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் சாதாரண மனிதரைப் போன்று அன்று முழுவதும் அங்கு தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் தனுஷ்கோடி சென்று கோதண்டராமர் கோவிலில் நடைபெற்ற கலச பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி ராமர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற கடல் வழி பாதையான ராம் சேது பாலத்தையும் மலர்களால் தூவி வணங்கினார்.


இப்படி 11 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த விரதம் இன்று ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் நிறைவு பெற்றது. அதாவது கோவிந்த் தேவகிரி மகாராஜ் பிரதமர் மோடிக்கு சரணமித் என்கிற இனிப்பு கலந்த பாலை ஊட்டி விட்டு பிரதமரின் விரதத்தை முடிக்க செய்தார்.


மேலும் 11 நாள் விரதத்தை வெற்றிகரமாக முடித்து சடங்குகளின் நிறைவு செய்ததற்காக பிரதமர் மோடியை கோவிந்த் தேவகிரி மகாராஜ் பாராட்டினார்.

Similar News