114 அதிநவீன போர் விமானம் வாங்க மத்திய அரசு: அதிநவீனமாக்கும் இந்திய விமானப்படை!
இந்திய விமான படையை நவீனமாக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு 114 போர் விமானங்களை மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப்படையை அதிநவீனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் விமானப்படையும் உபகரணங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சியினை 2007 ஆம் ஆண்டு முதல் துவங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு 114 போர் விமானங்களை இந்தியாவிற்காக வாங்க திட்டமிட்டுள்ளது இதற்கான ஒப்பந்த புள்ளிகளை கூறியுள்ளது இது நமது நாட்டின் போர் விமானங்களின் இருப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
நமது பக்கத்து நாடான சீனா தனது விமான படையை வேகமாக விரிவுபடுத்தும் இந்த நேரத்தில், இந்திய விமான படைக்கும் இந்த திட்டம் மிகவும் முக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் லக்ஷ்மன் பெஹரா கூறியுள்ளது: சீனர்கள் நவீன போர் விமானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர் பாகிஸ்தானும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் பற்றி குறையாக உள்ளன.
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியாவிற்கு ரஷ்ய பல சந்தர்ப்பங்களில் முக்கிய ஆயுதங்களை வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவிற்கு சொந்தமான முக்கிய போர் விமானங்களில் சுகோய் சு-30 எம்.கே.ஐ. எச்.ஏ.எல், தேஜாஸ் ஆகிய விமானங்கள் முக்கிய ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.