ஆய்வு தொடங்கியது - கொரோனா வைரஸ் மரபணுக்களின் தொகுப்பை வரிசைப்படுத்துதலில் இந்திய ஆராய்ச்சியாளர்கள்!

ஆய்வு தொடங்கியது - கொரோனா வைரஸ் மரபணுக்களின் தொகுப்பை வரிசைப்படுத்துதலில் இந்திய ஆராய்ச்சியாளர்கள்!

Update: 2020-04-08 08:45 GMT

நாவல் கொரோனா வைரஸ் என்பது ஒரு புதிய வைரஸ். இந்த வைரஸ் பற்றிய பல்வேறு அம்சங்களையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள்.

நாவல் கொரோனா வைரஸ் பற்றிய ஜீனோம் மரபணுக்குழு வரிசைப்படுத்துதல் குறித்துக் கண்டறிய, ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் கழகமும், புதுதில்லியில் உள்ள ஜீனோ மிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கழகமும், இணைந்து பணியாற்றி வருகிறார்கள். "இந்த வைரஸின் தோற்றம், இது எவ்வளவு விரைவாக செயல்படுகிறது, எவ்வளவு விரைவாகப் பெருகுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள இது உதவும்.

எவ்வளவு விரைவாக இது தோன்றுகிறது என்றும் இதன் வருங்கால அம்சங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் இந்த ஆய்வு உதவி செய்யும்" என்று சிசிஎம்பி-யின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இந்திய அறிவியல் இதழின் (இந்தியா சயின்ஸ் வயர்) மூத்த அறிவியலாளரான ஜோதி சர்மாவிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட உயிரியின், (ஜீனோம்) மரபணுத்தொகுப்பின், முழுமையான டிஎன்ஏ வரிசைக்கிரமத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதே முழு ஜீனோம் வரிசைக்கிரமம் என்ற முறையாகும். சமீபத்திய கொரோனா வைரஸ் மரபணுக்களின் தொகுப்பை வரிசைப்படுத்தும் அணுகுமுறையில், கொரோனா வைரஸ் உள்ளது என கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளிடமிருந்து இந்த வைரஸ் மாதிரிகளை எடுத்து, அந்த மாதிரிகளை, வரிசைப்படுத்தும் மையத்திற்கு அனுப்புவது உட்பட பல பணிகள் இதில் உள்ளன.

Similar News