மதுவால் கொரோனாவை ஒழிக்க முடியாது - ஐ.நா.சுகாதார நிறுவனம் விளக்கம்.!

மதுவால் கொரோனாவை ஒழிக்க முடியாது - ஐ.நா.சுகாதார நிறுவனம் விளக்கம்.!

Update: 2020-04-18 03:40 GMT

மது பழக்கம் உள்ளவர்களையும் அதிக போதையை ஏற்படுத்தும் மதுவகையால் கொரோனா நச்சு கிருமியை அழிக்க முடியும் என உலக அளவில் சமூக வலைத்தளத்தில் அதிகம் தகவல் பரவி வருவதற்கு ஐ.நா.சுகாதார அமைப்பு விளக்கம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானது குறிப்பிடதக்கது

அதிக போதை ஏற்படுத்தும் மதுவகையால் கொரோனா கிருமியை கொல்லும் வலிமை இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் வதந்தியை நம்பவேண்டாம் என கூறியுள்ளது

கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது

அதிகமான வலிமை கொண்ட ஆல்கஹாலை குடித்தால் கொரோனா வைரசை அழிக்கும் என்பது அனைத்தும் கட்டு கதையாகும் உண்மை இல்லை

எத்தகைய மது வகைகளை அருந்தினாலும் அவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிரானது மாறாக மனிதனுக்கு உடல் சார்ந்த தீங்கை உருவாக்கும்

பொது மக்கள் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் அதிலும் இது போன்ற அவசர அசாதாரண சூழலில் மது குடிப்பதை அரவே தவிர்ப்பது நல்லது நோய் தொற்று பரவும் நேரத்தில் மது குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது ஐ.நா.சுகாதார மன்றம்

Similar News