13 வயது ஜப்பானிய சிறுமியின் திறமை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அபாரம்!

Update: 2021-07-27 12:55 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்தினார். மோமிஜி நிஷியாதான் சிறு வயதில் தங்கம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. 13 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதே ஒரு சாதனை, இதிலும் தங்கம் வென்று மேலும் வரலாறு படைத்துள்ளதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


ஜப்பானின் ஸ்கேட்போர்டிங் பிரிவில் இது முதல் தங்கப் பதக்கமாகும். ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த மோமிஜி நிஷியா மற்றொரு 13 வயது வீராங்கனையான ராய்சா லீல் என்பவரை வென்றார். நிஷியா எடுத்த ஸ்கோர் 15.26. மற்றொரு ஜப்பான் வீராங்கனையான ஃபியூனா நகயாமா 14.49 என்ற ஸ்கோர் எடுத்து வெண்கலம் வென்றார். ஒரு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று ஜப்பான் சாதனை படைத்துள்ளது. 


இதற்கு முன்னால் பார்சிலோனாவில் 14 வயதில் ஜப்பான் வீராங்கனை கியோகோ இவாசாகி நீச்சலில் தங்கம் வென்றதே இளம் வீராங்கனையின் தங்கப்பதக்க சாதனையாகும். ஆடவர் போட்டியிலும் இதே ஜப்பான் வீரர் யூட்டோ ஹோரிகோம் இந்த விளையாட்டின் முதல் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதையடுத்து இப்போது மோமிஜி நிஷாயா தங்கம் வென்ற 13 வயது வீராங்கனை என்ற வரலாறு சாதனையை படைத்துள்ளார்.

Similar News