13 கடற்கொள்ளை நிகழ்வுகளை தடுத்து நிறுத்தி 110 உயிர்கள் காப்பாற்றியுள்ளோம் - இந்திய கடற்படை அறிவிப்பு!

Update: 2024-03-25 08:31 GMT

கடற்பகுதியில் கொள்ளையர்களின் அத்துமீறல் அராஜகம் அதிகரித்து வருகிற நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் 110 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து விரிவான தகவலையும் இந்திய கடற்படை அறிவித்துள்ளது அதில், இந்திய கடற்பரப்பை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம், பத்து போர் கப்பல்கள் இந்திய கடற் பரப்பில் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் தாக்குதல் சம்பவங்களை தடுக்க நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்திய கடற்படை 13 கடற் கொள்ளை நிகழ்வுகளை தடுத்து நிறுத்தி உள்ளது! 

மேலும் இந்த நிகழ்வில் இருந்து 110 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது அவர்களின் 45 பேர் இந்தியர்கள், 65 பேர் வெளிநாட்டுச் சேர்ந்தவர்கள் அதோடு பாகிஸ்தானைச் சேர்ந்த 27 பேரும் ஈரானை சேர்ந்த முப்பது பேரும் இதில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஐ என் எஸ் சுமித்ரா என்ற இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த கடற்கொள்ளையின் முயற்சிகளை முறியடித்து 19 பாகிஸ்தானியர்களையும் மீட்டுள்ளது. 


Source : The Hindu Tamil thisai 

Similar News