இந்திய எல்லையில் படையை நிறுத்த விரும்பவில்லை - நேபாள துணைமுதல்வர் ஈஷ்வர் பொக்கிரில்.!

இந்திய எல்லையில் படையை நிறுத்த விரும்பவில்லை - நேபாள துணைமுதல்வர் ஈஷ்வர் பொக்கிரில்.!

Update: 2020-06-10 06:26 GMT

இந்தியா உடனான எல்லைப் பிரச்சினையை பற்றி பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதாகவும் மற்றும் எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்த விரும்பவில்லை என்றும் நேபாள துணை முதல்வர் ஈஷ்வர் பொக்கிரில் தெரிவித்துள்ளார்.

இந்திய நேபாள எல்லை பிரச்சனையை பற்றிய பேச்சுவார்த்தையை இந்தியா பதிலளிக்கும் என காத்துக் கொண்டிருக்கிறோம் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் க்யாவாளி கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை நடத்த நவம்பர் டிசம்பர் மாதத்திலும் தற்போது மே மாதத்திலும் இந்தியாவுக்கு அழைப்பு கொடுத்ததை அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா பகுதியில் இருக்கும் Limpiyadhura, Lipulekh, Kalapani ஆகிய இடங்களை தங்களுக்கு சொந்தமானது என கொண்டாடும் நேபாளம் மூன்று பகுதியையும் சேர்த்துக்கொண்டே நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. பின்பு அதற்கான ஒப்புதல் அளிக்கும் விதமாக அரசியல் அமைப்பை திருத்தவும் முடிவெடுத்துள்ளது.

இந்த வரைபடத்தை வெளிவந்த உடனே மத்திய அரசு நேபாளத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் இரண்டு நாடுகள் இடையே சிறிய சலசலப்பு சூழல் ஏற்பட்டது. மேலும், நேபாளத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை பற்றி இந்தியா இதுவரை எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.news18.com/news/international/nepal-foreign-minister-says-country-waiting-for-response-from-india-to-resolve-border-dispute-vai-302539.html 

Similar News