மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மோடி பல மொழிகள் கற்ற 'இந்த மண்ணின் மகன்'- கங்கனா ரணாவத்!
மோடி சோனியா காந்தி போல் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல. அவர் இந்த மண்ணின் மகன் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை போல பிரதமர் மோடி ஒன்றும் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல. 'நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்த மண்ணின் மகன்' என்று ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.குலு மாவட்டத்தில் அவர் பேரணியில் பேசியதாவது:-
மோடிக்கு பஹாரி உட்பட பல பழமொழிகள் தெரியும். சோனியா காந்தி போல் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல .அவர் இந்த மண்ணின் மகன். ஏழை குடும்பத்தில் பிறந்து நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகிறார். மண்டி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்த சிங்கின் தந்தை ஆறு முறை இமாச்சல முதல்வராக இருந்தவர். நீண்ட காலமாக அவரது குடும்பம் அதிகாரத்தில் ஒட்டியுள்ளது.
ஆனால் மோடி தேநீர் விற்பனையாளராக இருந்தவர். ஹிமாச்சலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் ஜெயராம் தாக்கூர் கொத்தனாரின் மகன். ஒருபுறம் மோடியின் நல்லாட்சி மற்றொருபுறம் காங்கிரசின் ஊழல் ஆட்சி. இதில் பாஜக நல்லாட்சிக்கு ஜூன் 1ம் தேதி வாக்களிக்க ஹிமாச்சல மக்கள் முடிவெடுத்து விட்டனர் என அவர் தெரிவித்தார். பாஜக ஓடாத படம் எடுத்து வருவதாக ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
கங்கனா ரணாவத் நல்ல நடிகை தான் ஆனால் அவரின் இந்த படம் ஜெயராம் தாக்கூர் மற்றும் பாஜக தலைவர் ராஜு பிண்டல் போன்ற கதாசிரியர்களை கொண்டதால் தோல்வி படமாக அமையப் போவதாக அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த கங்கனா ஜெயராம் தாகூரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் சுக்கு தனது 15 மாதங்கள் பணியில் தோற்றுவிட்டதாக தெரிவித்தார்.
SOURCE :Dinamani