சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் - தமிழ் வம்சாவளியை சேர்ந்த அதிபரால் பதவி பிரமாணம்!
சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் . 51 வயதாகும் அவர் இதுவரை நாட்டின் துணை பிரதமராக இருந்து வந்தார். சுமார் 20 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்த லீ சியென் லுங் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்ததை தொடர்ந்து புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும் அங்கம் வகிக்கும் மக்கள் செயல் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் தர்மன் சண்முகரத்னத்தால் பிரதமராக புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட லாரன்ஸ் வாங் நாட்டின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார்.o
SOURCE :Dinaboomi