அமெரிக்காவினுள் ஒரு சுதந்திர இடத்தை அறிவித்துள்ள கிளர்சியாளர்கள் - திடுக்கிடும் பின்னணி.!

அமெரிக்காவினுள் ஒரு சுதந்திர இடத்தை அறிவித்துள்ள கிளர்சியாளர்கள் - திடுக்கிடும் பின்னணி.!

Update: 2020-06-16 03:30 GMT

அமெரிக்க வாஷிங்டன் நகரில் ஒரு பெரிய பரப்பளவு இடத்தை, சுதந்திர இடமாக அங்கே உள்ள மக்கள் அறிவித்துள்ளார்கள்.  அது கப்பிட்டல் ஹில் என்ற இடம் ஆகும். அமெரிக்க பொலிசாரால் அங்கே செல்ல முடியவில்லை. 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் காவலில் உள்ளார்கள். அவர்கள் வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளதோடு. குறித்த இடத்தை ஒரு சுந்திரம் மிக்க இடமாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த 8ம் திகதி முதல் அந்த இடத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா இழந்துள்ள நிலையில். இதனை வன்மையாக கண்டித்துள்ளார் அதிபர் டிரம்ப். கிளர்சியாளர்கள் வசம் உள்ள பகுதியை மீட்க்க ராணுவத்தை அனுப்பி, நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியும். இருப்பினும் பெரும் உயிர் சேதம் ஏற்படும். சொந்த மக்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பியதாக ரம் மீது பழிச் சொல் வரும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடும் நிலை தோன்றியுள்ளது.

கிளர்சியாளர்கள் கப்பிட்டல் ஹில் உங்களை வர வேற்க்கிறது என்ற பதாதைகளை எல்லையில் வைத்திருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள பகுதியில்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். இதனால் இளைஞர்கள், அந்த இடத்தை தேடிச் செல்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அமெரிக்க காவல் படையால், இதனை ஒரு கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவது என்பது பெரும் சவால் மிக்க ஒரு செயலாக கருதப்படுகிறது.

Similar News