சீனாவின் நில அபகரிப்பு பேராசைகள் - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

சீனாவின் நில அபகரிப்பு பேராசைகள் - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

Update: 2020-06-19 02:05 GMT

இளம் இந்தியர்கள் இந்திய - சீன உறவின் வரலாற்றையும், சீனாவின் நில அபகரிப்பு ஆசைகளையும் அறிந்து கொள்வது அவசியம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1980-களிலேயே சீனா தான் இந்தியாவின் முதல் எதிரி என்று தீர்க்க தரிசனத்துடன் கூறி விட்டார். எதிரியை அறிந்து கொள்ளும் அறிவும் பலமே.

1. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வரலாற்று ரீதியாக எந்த எல்லையும் கிடையாது. இந்திய எல்லை பெரும்பாலும் திபெத்துடனும், கொஞ்சம் மத்திய ஆசிய கிழக்கு துர்கிஸ்தான் உடன் மட்டுமே உண்டு. 1949-ல் கம்யூனிஸ்ட் சீனா, திபெத்தைக் கைப்பற்றியது. மேலும் ஜின்ஜியாங் மற்றும் சில மாகாணங்களையும் சீனாவிற்குள் விழுங்கியது. புத்த மதத்தை பின்பற்றும் திபெத்தை, சீனா கைப்பற்றியது 20-ஆம் நூற்றாண்டின் சோகங்களில் ஒன்றாகும். திபெத் நம்முடன் கலாச்சார,மத, வரலாற்று ரீதியில் பெரும் பிணைப்புகளைக் கொண்ட ஆயிரம் காலத்து அண்டை நாடாகும். இதில் இன்னும் கொடுமையாக, ஆசியாவில் பாயும் நதிகளில் 9 நதிகள் திபெத்தில் உருவாகின்றன. கம்யூனிஸ்ட்கள் கட்டுப்பாட்டிற்கு அவை சென்றன. சோசியலிஸ்டுகளை தைவானுக்கு துரத்தி விட்டது சீனா.


Image Source: Twitter/KiranKS

2.ஹெய்ஹி, டேங்க்கோங் என்று இரண்டு இடங்கள் சீனாவில் உள்ளன. அவற்றுக்கிடையே நீங்கள் ஒரு கற்பனைக் கோடு வரைந்தால் அது சீனாவை இரண்டாக பிரிக்கும். அதில் கிழக்குப் பகுதியில் 94% சீன மக்கள் வாழ்கிறார்கள். அது தான் ஒரிஜினல் சீனா. மேற்குப் பக்கம் அனைத்தும் நில அபகரிப்பினால் பெற்றவை. 

Image Source: Twitter/KiranKS

3. சரி. இந்தியாவில் எந்தெந்த இடங்களை சீனா உரிமை கோருகிறது?

அக்ஷய் சின்,லடாக்கின் சில பாகங்கள்,ஷாக்சிகாம் பள்ளத்தாக்கு, உத்தர்காண்டின் சில பகுதிகள், மொத்த அருணாச்சல பிரதேசம். அவர்கள் கொள்கை எளிதானது. கொஞ்சம் கேட்பது போல் இருக்கும், கண்ணை இமைத்தால் அனைத்தையும் இழந்து விடுவோம். 


Image Source: Twitter/KiranKS

4.ஒரு வேளை போர் வந்தால், எந்தெந்த எல்லைப்பகுதியில் வரும்?

DBO மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கொங் ஏரி , சிந்து நதி உருவாகும் பகுதி, கேதார்நாத் வடக்கிலுள்ள உத்தரகண்ட், சிக்கிம் பூட்டான் சந்திப்பு, தவாங்,சியாங் பள்ளத்தாக்கு, வாலோங். 


Image Source: Twitter/KiranKS

5. இப்போது ஏன் போர் பதற்றம்?

2022க்குள் அனைத்து 60 எல்லை சாலைகளையும் இந்தியா முடித்து விட்டால்,சீனாவால் பெரிய ஜாம்பவான் போல் காட்ட முடியாது. இந்தியா லடாக்கில் உயரமான பாலத்தைக் காட்டியுள்ளது. பங்கோங் ஏரியை மேற்கு நோக்கி வருவதும், கால்வான் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க முயல்வதும் இதற்காகத் தான். 


Image Source: Twitter/KiranKS

6.இந்தியா-சீனா போர் வந்தால் என்னாகும்?

இந்திய ராணுவத்துக்கு அனுகூலங்கள் உண்டு. சப்ளை மையங்கள் 200-400 கிமீ தூதில் உண்டு. சீனாவுக்கு 1500-2000 கிமீ தூரத்தில் உள்ளன. திபெத்தில் முழு லோட் விமானங்களை சீனாவால் இயக்க முடியாது.

7.சீனா, இந்தியாவைத் தாக்கியது நேபாளத்துக்கு, பூடானுக்கும் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். சீன அதிபர் மாவோ ஒரு முறை சீனாவின் வலது கை திபெத் என்றும் அதன் 5 விரல்கள் பற்றிக் கூறினார். அவை, திபெத், சிக்கிம்,நேபாளம்,பூட்டான்,அருணாச்சல பிரதேசம். எச்சரிக்கை.  



Similar News