புதுச்சேரி: மக்கள் அவசியமின்றி சட்டமன்றத்துக்கு வர வேண்டாம் - சட்டப்பேரவைத் தலைவர்!

புதுச்சேரி: மக்கள் அவசியமின்றி சட்டமன்றத்துக்கு வர வேண்டாம் - சட்டப்பேரவைத் தலைவர்!

Update: 2020-06-19 06:55 GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் முனுசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் தற்பொழுது கொரானா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது நோய்ப் பரவலைத் தடுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சுயக்கட்டுப்பாட்டாலே, நோய்ப் பரவலைத் இருந்தபொழுதும், பொதுமக்கள் தடுத்திட முடியும். தற்பொழுது தினமும் மிக அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் சட்டமன்றத்துக்கு வருகின்றனர். இது கொரானா நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, பொது மக்கள் சட்டமன்றத்திற்கு வருவதைக் கட்டுப்படுத்த

அவசியம் என்றால் மட்டுமே முதலமைச்சர் அலுவலகம் மற்றம் இதர அலுவலக அதிகாரிகளின் சம்மதம் பெற்ற பின்னரே, பொதுமக்கள் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவர்கள் என்றும் சட்டமன்றத்திற்கு வருபவர்களின் பெயர் கைபேசி மற்றும் வருகைக்கான நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்படும் என்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 


மேலும், சட்டமன்றத்திற்குப் பொது மக்கள் வருவதைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலேயே பொது மக்களை சந்தித்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Similar News