புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - முற்றிலுமாக கொரோனா மருத்துவமனையாக மாற்ற முடிவு.!

புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - முற்றிலுமாக கொரோனா மருத்துவமனையாக மாற்ற முடிவு.!

Update: 2020-06-23 13:03 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்,

புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதியதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளதாகவும் அதில் புதுச்சேரியை சேர்ந்த 15 பேரும் காரைக்காலை சேர்ந்த 4பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதகாவும் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 402ஆகவும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 228 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது என்றார் மேலும் முதலியார்பேட்டை பகுதியை சார்ந்த 62 வயது பெண் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிற நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தும், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சையும் முழுமையாக நிறுத்தப்பட்டு வரும் வரும் 26ஆம் தேதி முதல் கொரோனா மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Similar News