மீண்டும் ஆட்டம் காட்டும் சீனா - எல்லையை நோக்கி விரையும் இந்திய ஏவுகணைகள் : ஒரு சில நொடிகளுக்குள் விமானத்தை பஸ்பமாக்கும்!

மீண்டும் ஆட்டம் காட்டும் சீனா - எல்லையை நோக்கி விரையும் இந்திய ஏவுகணைகள் : ஒரு சில நொடிகளுக்குள் விமானத்தை பஸ்பமாக்கும்!

Update: 2020-06-28 04:05 GMT

இந்திய-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சமாதான பேச்சுவார்த்தைகளையும் மீறி சீனப் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு லடாக் பகுதியை நோக்கி இந்தியா ஏவுகணைகளை விரைந்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில்  இந்திய - சீனப் படையினர் இடையே வெடித்த மோதலையடுத்து இரு நாடுகளும் எல்லையில் படையினரையும், போர்த்தளவாடங்களையும் தொடர்ச்சியாக குவித்து வருகின்றன.

அமைதி பேச்சுவார்த்தையை மீறி, சீன ராணுவம் எல்லையில் சுகோய்-30 ரக போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இவை எல்லை மீறி அடிக்கடி இந்திய வான் பகுதிகளுக்கு அருகில் பறந்து செல்வதால் பதற்றம் நீடிக்கிறது. இதனை தொடர்ந்து சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று இராணுவத்தளபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் வந்தால், அவற்றை ஒரு சில நொடிகளுக்குள் சுட்டு வீழ்த்தும் திறன் மிக்க ஏவுகணைகளை கிழக்கு லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். அதனோடு அந்நிய நாட்டு விமானங்களைக் கண்டறியும் ராடார், ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனம் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளது. 

Similar News