சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி - துரத்திய காவலரின் உயிரை பறித்த கொடூரம்!

சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி - துரத்திய காவலரின் உயிரை பறித்த கொடூரம்!

Update: 2020-06-30 10:07 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றதால் துரத்திப் பிடிக்க முயன்ற பொழுது கன்டெய்னர் லாரி மோதி காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் தப்பி ஓட்டியுள்ளனர். இதனால் காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க அங்கிருந்த காவலர்கள் முயன்றனர். ஆனால் அங்கும் லாரி நிற்காமல் சென்றதால் போலீசார் சந்தேகமடைந்தனர். ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் லாரியை மடக்கிப் பிடிக்க இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார்.

முந்திச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், காவலர் தலை நசுங்கி உயிரிழந்தார். குடிபோதையல் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற பரமக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரை ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் கைது செய்தனர்.


சாத்தான்குளம் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சங்கள் வரையில் உதவிகள் குவிகின்றன ஆனால் இங்கு பணியில் இறந்த காவலர் பற்றிய செய்திகள் கூட சரிவர வெளியில் வராத நிலையில் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மிகுந்த மன உளைச்சல்'க்கு ஆளாகியுள்ளனர்.

Similar News