விஜய் பேசிய டயலாக்.. வீடியோவை வெளியிட்டு தளபதி விஜயை பெருமைப்படுத்திய - நந்திதா ஸ்வேதா.!

விஜய் பேசிய டயலாக்.. வீடியோவை வெளியிட்டு தளபதி விஜயை பெருமைப்படுத்திய - நந்திதா ஸ்வேதா.!

Update: 2020-07-02 13:59 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இதுவரை பல படங்களில் நடித்துள்ள இவர் புலி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.

தளபதி விஜயின் ரசிகையான நந்திதா ஸ்வேதா தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஐபிசி 376 என்பது பாலியல் வன்கொடுமை சட்டத்தை குறிப்பதாகும்.

இந்தப் படமும் பாலியல் வன்கொடுமை பற்றி தான் பேச உள்ளது. ராம்குமார் சூப்பராமன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் வெகு விரைவில் வெளியாக உள்ளது.இதுகுறித்த புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தளபதி விஜய் நடிப்பில் மஜித் இயக்கத்தில் வெளியான தமிழன் படத்தில் இந்த சட்டம் பற்றி பேசி இருப்பார்.

இந்த இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த பிரபல வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Similar News