அரசு இடத்தில் கட்சி கூட்டம் போட்ட தி.மு.க - திருவண்ணாமலையில் உதயநிதியின் இளைஞரணி அடாவடி!

அரசு இடத்தில் கட்சி கூட்டம் போட்ட தி.மு.க - திருவண்ணாமலையில் உதயநிதியின் இளைஞரணி அடாவடி!

Update: 2020-07-04 07:50 GMT

தி.மு.க-வுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது ஆம் "நில அபகரிப்பு சட்டம்" என ஒன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் தீவிரமாக நடவடிக்க எடுக்கப்பட்டத்திற்கு தி.மு.க-வின் செயல்பாடுகளே காரணம். ஆம், அடுத்தவர் நிலத்தை தன் நிலம் போல் பாவித்து அதை ஆக்கிரமிப்பு செய்ய கைதேர்ந்தவர்கள் தி.மு.க-வினர்.

அந்த வகையில் இப்பொழுது அரசு கட்டிடத்தையே கட்சிக் கூட்டங்களுக்கு உபயோகபடுத்த ஆரமித்துவிட்டனர்.


நேற்று முன்தினம் திருவண்ணாமலை, செங்கம் தி.மு.க-வின் இளைஞர் அணியின் கூட்டம் தி.மு.க எம்.எல்.ஏ கிரி தலைமையில் அரசு இடமான சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இது அரசு விதிகளுக்கு புறம்பானது.

இது தி.மு.க எம்.எல்.ஏ கிரிக்கும் நன்றாகவே தெரியும். அரசு விதிகளும் இந்த கூட்டம் அரசு விதிகளை மீறி போடப்பட்ட கூட்டம் என்றும், இவ்வாறு தெரிந்தும் அவர் இந்த மாதிரி செய்திருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ கூட்டம் ஏற்பாடு செய்தது கண்டிப்பாக கட்சியின் தலைமைக்கோ அல்லது எதெற்கெடுத்தாலும் அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிக்கும் பட்டத்து இளவரசர் உதயநிதிக்கோ தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. ஆகவே, இதை தி.மு.க ஏற்றுக்கொள்கிறதா என தலைமை விளக்க வேண்டும்.


தமிழக முதல்வர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன. இதேபோல, பிற கட்சிகளான பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளின் கூட்டமும் அரசு இடங்களில் நடக்க அனுமதி கிடைக்குமா எனவும் சரமாரியாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இது குறித்து பா.ஜ.க தலைவர் ம.வெங்கடேசன் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். "நேற்று திருவண்ணாமலை, செங்கம் திமுகவின் இளைஞர் அணியின் கூட்டம் திமுக எம்எல்ஏ கிரி தலைமையில் அரசு இடமான சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இது அரசு விதிகளுக்கு புறம்பானது. உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாஜக கூட்டத்திற்கு அங்கு இடம் கிடைக்குமா?" என்ற கேள்வி எழுப்பியுள்ளார் ம.வெங்கடேசன்.

Full View


Similar News