தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17000 பேர் சாலை விபத்தால் மரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17000 பேர் சாலை விபத்தால் மரணம் அமைச்சர் அடைகின்றனர் என்றூ மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-17 08:00 GMT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நேற்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

இன்னுயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் விபத்துக்கள் அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டது. இந்த இடங்களை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் என்று 683 ஆஸ்பத்திரிகள் கண்டறியப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் விபத்துக்கு ஆளானவர்களை இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தால் முதல் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு லட்சம் வரை செலவிடப்பட்டு அவர்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஆண்டொன்றுக்கு  சாலை விபத்தில் ஒரு  1,50,000 பேர் மரணம் அடைகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுதோறும் 17,000 பேர் சாலை விபத்துகளால் மரணம் சூழல் நிலவுகிறது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு விபத்துகளை நேரில் பார்ப்பவர்கள் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் இருந்தாலும் போலீஸ் விசாரணைக்கு வரவேண்டும் என்று நினைத்து முன்வராமல் இருந்தார்கள். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்துகளில் சிக்குவோரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தால் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு முழுவதும் விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,107 ஆக பதிவாகியுள்ளது.இவர்கள் அனைவருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த திட்டம் நல்ல பலனைத் தந்துள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த 15 மாதங்களில் ரூபாய் 132 கோடியே 52 லட்சம் செலவு செய்துள்ளது .இவ்வாறு அவர் கூறினார்



 


Similar News