மக்களின் பாதுகாப்புக்காக ரூ.1800 கோடியில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க திட்டம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

மக்களின் பாதுகாப்புக்காக ரூ.1800 கோடியில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க திட்டம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

Update: 2020-07-31 11:46 GMT

நீதிமன்ற வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்பட பல துறைகளின் பாதுகாப்புக்காக ரூபாய் 1800 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க இருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதனைப் பற்றி அவர் கூறியது: உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், வழிபாட்டுத்தலங்கள், வங்கிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான பல நிறுவனங்களின் பாதுகாப்பு வேலைகளை கவனிப்பதற்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வருகின்ற புரோவின்சியல் ஆர்ம்டு கான்ஸ்டாபுலரி (பிஏசி) போல உத்தர பிரதேசத்திலும் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படுகிறது. இதனால் காவல்துறையின் மன அழுத்தத்தைப் குறைக்கவும் மற்றும் மாநிலத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் அமைக்கப்படுகிறது.

இதனிடையே ரூபாய்.1800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 பட்டாலியன் படைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்து இந்த திட்டத்துக்கு நிதி ஓதுக்கப்படாததால் துணை வரவில் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் 2021-2022ஆம் ஆண்டு நிதி வரவில் செலவை சேர்க்கப்படும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

Similar News