19 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி!! கெத்துக்காட்டும் பாஜக இளைஞரணி தலைவர் Dr.SG.சூர்யா..
மாநில இளைஞரணி துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் வேலூர் பெருங்கோட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் குடியாத்தம் காட்பாடி சாலையில் அமைந்திருக்கும் திருமண மஹாலில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேந்தர் வரவேற்பாற்றினார். மேலும் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா கலந்துகொண்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக மக்கள் யாத்திரை நடத்தி ஆதரவுகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் தேர்தல் முடிவுகளை கண்டு திமுக திகைத்துப் போய் இருக்கிறது.
தற்பொழுது தமிழகத்தில் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 64 லட்சம் பேர் இருப்பதாகவும் அவர்கள் முதல் முறையாக ஓட்டு அளிக்க போவதாக தெரிய வருகிறது. நான்கு மாவட்டங்களில் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்காக மாரத்தான் போட்டி நடத்தப்பட்ட நிலையில் இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 19ஆயிரம் இளைஞர்களுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கஞ்சா போன்ற போதை பொருள்களின் உலகம் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல், முதலீடு போன்றவற்றிலும் திமுக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.