கூட்டாளியை முதுகில் குத்திய துரோகி சீனா.! வியட்நாம், 1979ல் சீனாவை ஓட ஓட விரட்டியடித்தது எப்படி? #SinoVietnamWar #1979War

கூட்டாளியை முதுகில் குத்திய துரோகி சீனா.! வியட்நாம், 1979ல் சீனாவை ஓட ஓட விரட்டியடித்தது எப்படி? #SinoVietnamWar #1979War

Update: 2020-07-10 02:37 GMT

1973 ல் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டு, வியட்நாமிலிருந்து முற்றிலுமாக பின்வாங்கிய பின்னர், இந்தோசீனா தீபகற்பத்தில் செயல்படும் வெவ்வேறு கம்யூனிச சக்திகளின் (சீனா, ரஷ்யா, வியட்நாம்) பொதுவான எதிரி இல்லாமல் போனது.

மறுபுறம், அந்த நேரத்தில் உலகின் இரண்டு முன்னணி கம்யூனிச சக்திகளான சீனாவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே வந்தது. 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனின் சீன வருகையுடன் சீன-அமெரிக்க உடன்பாடு தெளிவாகத் தெரிந்தது. 1979 ஆம் ஆண்டில், சீனத் துணை அதிபர் டெங் சியாவோப்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார்.

அவர் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரிடம், வியட்நாமைப் பற்றி "சிறு குழந்தை குறும்பு செய்கிறான், அவன் அடிவாங்கும் (spanked) நேரமிது " என்று கூறினார். இது 1979 ஜனவரியில் நடந்தது. அடுத்த மாதத்திலேயே, சீனா தனது அண்டை நாடான வியட்நாம் மீது ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதலை (limited attack) அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு சீனா கூறிய காரணம், சீனாவின் நட்பு நாடான கம்போடியாவை ஆதரிப்பதற்காக என்று. 1978 ஆம் ஆண்டில், 'பா சக்' (Ba Chuc) படுகொலைக்குப் பின்னர், கம்போடிய இராணுவத்தின் கைகளில் 3,000க்கும் மேற்பட்ட வியட்நாமிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, வியட்நாம் கம்போடியாவிற்கு எதிராக முழு அளவிலான போரை நடத்தியது.

கம்போடியா, அமெரிக்க-வியட்நாம் போரில் வியட்நாமிய கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவளித்தது. எவ்வாறாயினும், இந்த பிராந்தியத்தில் வியட்நாம் தன்னை மையமாகக் கொண்டு, சோவியத் ஒன்றியம் (USSR) போல, இந்தோசைனீஸ் சோசலிச கூட்டமைப்பிற்கு திட்டமிட்டுள்ளதாக கம்போடியா அஞ்சியது,

கம்போடியாவின் கெமர் ரோக் தலைவர், 20 ஆம் நூற்றாண்டின் கொடுங்கோலர்களில் ஒருவரான 'போல் பாட்' (Pol Pot) . இவர் சீனக் கூட்டாளி. கெமர் ஆட்சி சீனாவால் ஆதரிக்கப்பட்டது, வியட்நாமியர்கள் சோவியத் யூனியனால் (ரஷ்யா) ஆதரிக்கப்பட்டனர்.

யுத்தத்தை அறிவித்த மறுநாளே சீனா, சோவியத் ஒன்றியத்தை தனது கூட்டாளியான வியட்நாமின் சார்பாக போரில் தலையிட்டால் , சோவியத் யூனியனுக்கு எதிராக முழு அளவிலான போரை சீனா நடத்தும் என்று எச்சரித்தது.

அச்சுறுத்தல் வெறும் பேச்சுக்காக இல்லை என்பதைக் காட்ட, சோவியத் யூனியனுடனான சீனாவின் எல்லையில் சுமார் 15 லட்சம் படையினரை அவசரகால போர் எச்சரிக்கையில் சீனா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது; சின்ஜியாங்கில் ஒரு புதிய இராணுவ கமாண்டை அமைத்தது; சீன-சோவியத் எல்லையிலிருந்து 3 லட்சம் சீனப் பொதுமக்களை வெளியேற்றியது.

சோவியத்துகளால், சீனர்கள் தங்கள் கூட்டாளியான வியட்நாமைத் தாக்குவதைத் தடுக்க முடியவில்லை. இது கம்யூனிச உலகில் சோவியத் ஒன்றியத்தின் பலவீனத்தை குறிக்கிறது. சோவியத் யூனியன் நேரடியாக போரில் தலையிடவில்லை, ஆனால் வியட்நாமிய வீரர்களை வடக்கு வியட்நாமிற்கு விமானம் மூலம் கொண்டுசெல்வது, உளவு மற்றும் உபகரணங்களை வழங்கியது.

ரஷ்யர்களின் தரப்பில் தயக்கம் இருந்தது, ஏனென்றால் சீனா அவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு கொடுத்த உறுதியை போலவே) இது ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதலாக (limited attack) இருக்கும் என்று உறுதியளித்தது.

சீன இராணுவம் பெரியதாக இருந்தது, ஆனால் சீன-சோவியத் எல்லையில் ஒரு பெரிய படையை நிறுத்த வேண்டியிருந்தது. பிப்ரவரி 1979 இல் சுமார் 2 லட்சம் வீரர்கள் வடக்கு வியட்நாமிற்குள் நுழைந்தனர். அவர்கள் வியட்நாமியர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

ஒரு மாதத்திற்குள், சீனர்கள் பின்வாங்க முடிவு செய்தனர். மார்ச் 6 ஆம் தேதி, ஹனோய் நுழைவாயில் திறந்திருப்பதாகவும், அவர்கள் பின்வாங்குவதாகவும் சீனா அறிவித்தது. சீன இராணுவம் வடக்கு வியட்நாமிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, பின்வாங்கும்போது அந்த பிராந்தியத்தை தீவிர இழப்புக்கு தள்ளியது.

இரு தரப்பினரும் வெற்றியை அறிவித்தனர், ஆனால் அறிஞர்களிடையே பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், வியட்நாமியர்கள் போர்க்களத்தில் சீனர்களை விட சிறப்பாக செயல்பட்டனர். மேலும், வியட்நாம் கம்போடியாவைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே சீனா தனது இலக்கை அடைய முடியவில்லை என்பதே உண்மை.

சில அறிஞர்கள் சீனாவின் வியட்நாம் போர் கிட்டத்தட்ட அர்த்தமற்றது என்று வாதிடுகின்றனர், டெங் சியாவோபிங் (சீன துணை அதிபர்) ஒரு கவனச்சிதறலாக அதைப் பயன்படுத்தினார், உள்நாட்டுப் பிரச்சினைகளை கையாளும் போது இராணுவத்தை எல்லையில் பிஸியாக வைத்திருந்தார் என்று கூறுகிறார்கள். இன்று, இந்த "அர்த்தமற்ற" போரின் நினைவுகளையும் விவாதங்களையும் சீன அரசாங்கம் தீவிரமாக அடக்குகிறது.

இது முதல் முறை அல்ல. 1962 ஆம் ஆண்டில் சீனா மற்றொரு அண்டை நாடான இந்தியாவுக்கு எதிராக இதேபோன்ற அர்த்தமற்ற போரை நடத்தியது. தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்குள், அது திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்தியத் தலைமை இந்தி-சினி பாய் பாய் (இந்திய-சீன சகோதரத்துவம்) கோஷத்தை, தாக்குதல் நாள் வரை பாடிக்கொண்டிருந்தது.

சீனா நம்பக்கூடாத நாடு என்பதை எடுத்துக்காட்ட நீண்ட வரலாறு உள்ளது. ஒரு அறிஞர் இவ்வாறு வாதிடுகிறார்,

"1979 சீன-வியட்நாமிய போரின் எதிர்மறை விளைவுகள் மற்றும் மரபு ... புறக்கணிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டில் சீனா ஒரு நெருங்கிய கூட்டாளியைத் தாக்கியது - 1950 களின் முற்பகுதியில் இருந்து ஆதரித்து வந்த கூட்டாளி - கொரியப் போரில் சீனத் தலையீடு மற்றும் 1961 சீன-வட கொரிய பரஸ்பர உதவி மற்றும் நட்பு ஒப்பந்ததில் கையொப்பமிட்ட போதிலும், சீனா இறுதியில் நம்பப்படக்கூடாத ஒரு நாடு தான். "

ஒரு பொதுவான சர்வாதிகார ஆட்சியைப் போலவே, ஒவ்வொரு முறையும் சீனா உள்நாட்டில் சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​அது தனது அண்டை நாடுகளுக்கு தன் பலத்தைக் காட்டவும் ஒரு கவனச்சிதறலாகவும் தாக்குதலைத் தொடங்குகிறது.

இது அதன் சந்தர்ப்பவாதம், கொள்கைகள் இல்லாத தன்மை ஆகியவற்றுடன் இணைந்து சீனாவை தனிமைப்படுத்தியுள்ளது. சமீபத்தில், சீன அதிகாரிகள் விளாடிவோஸ்டோக்கை ஒரு சீன பிரதேசமாகக் கூறி ரஷ்யாவுடன் வம்பிழுத்தனர்.

இப்படி கொள்கைகள் இல்லாத தன்மை தான், சீனாவின் அதிகப்படியான ஆக்கிரமிப்பு, கொடுமைப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தும் தோரணையின் பின்னணியில் உள்ளது - இது வன்முறையை மட்டுமே ஒரு பதிலாக கொண்டுள்ளது, மென்மையான சக்தி (soft power) சுத்தமாக இல்லை.

மேற்கத்திய உலகம் ஹாங்காங்கர்களை சீனா நடத்தும் முறை குறித்து பிரச்சினையை எழுப்பும்போது சீனா இன்று 'காலனித்துவம்' என்று அழக்கூடும், ஆனால் உண்மை என்னவென்றால், மற்ற மூன்றாம் உலக நாடுகள் என்று வரும்போது சீனா ஒரு காலனித்துவ சக்தியாக செயல்பட்டுள்ளது, அது வியட்நாம், இந்தியாவுக்கு எதிரான போர்களாக இருந்தாலும் சரி, கடன் கொடுத்து பொறியில் சிக்க வைக்கும் ஆப்பிரிக்க நாடுகளானாலும் சரி.

Translated From: Swarajya 

Similar News