பிச்சைக்காரன்-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

பிச்சைக்காரன்-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

Update: 2020-07-25 10:59 GMT

இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறான் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது பிச்சைக்காரன் தான்.

மேலும் இந்த வார தொடக்கத்தில், விஜய் ஆண்டனி தனது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 24 ஆம் தேதி தனது பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றின் 2 ஆம் பாகத்தை அறிவிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது.

இது விஜய் ஆண்டனியின் பிளாக்பஸ்டர் வெற்றியான பிச்சைக்காரனின் தொடர்ச்சியாகும். முதல் பகுதியை சசி இயக்கியிருந்த நிலையில், 2 ஆம் பாகத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார்.இவர் நடிப்பு மற்றும் இசை தவிர, பிச்சைக்கரன் 2 படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார்.

இவர் ஊரடங்கின் போது பிச்சைக்காரன் 2 படத்தின் கதையை விஜய் ஆண்டனி எழுதியுள்ளார்.

ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் தயாரிக்கும் பிச்சைக்கரன் 2 படத்தில் தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவாளராகவும், கே அருசாமி கலை இயக்கநராகவும் உள்ளனர்.

மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை தவிர, விஜய் ஆண்டனி தற்போது 6 படங்களைக் கையில் வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Similar News