ஊரடங்கால் வேலை, ஊதியம் இழந்த ஊழியர்கள் உதவி பெற வருகிறது 20 கால் சென்டர் மையங்கள், உலகளவில் எந்த நாடும் எடுக்காத முயற்சி.!

ஊரடங்கால் வேலை, ஊதியம் இழந்த ஊழியர்கள் உதவி பெற வருகிறது 20 கால் சென்டர் மையங்கள், உலகளவில் எந்த நாடும் எடுக்காத முயற்சி.!

Update: 2020-04-14 11:27 GMT

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 22 ந்தேதியில் இருந்து நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. யாரும் வீட்டை விட்டு, அல்லது தங்கும் இடங்களில் இருந்து வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடிக்கிடக்கின்றன. போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் ஏராளமான பணியாளர்கள் ஊதியம் இன்றியும், வேலையை இழந்தும் தவித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கவில்லை என்றும், நடப்பு மாதத்துக்கு ஊதியம் தொடர்பான எந்த பதிலும் இல்லாத நிலையில் இலட்சக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குரியதாக இருக்கிறது. இவர்களில் புலம் பெயர்ந்தோர் பலர் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் வேலை பார்த்த இடங்களில் சிக்கி அவதியுறுவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில் ஊதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரடங்கு காலத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தணிப்பதற்கும் பான்-இந்தியா அடிப்படையில் 20 கால் சென்டர் மையங்களை அமைத்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மிகவும் பாதிப்படையும் தொழிலாளர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் ஊதியக் குறைப்பு அல்லது வேலை இழப்பு தொடர்பாக இந்த அழைப்பு மையங்களை அறிவிக்கப்படும் தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பான்-இந்தியா அடிப்படையில் தலைமை தொழிலாளர் ஆணையர் (சி.எல்.சி) (சி) அலுவலகத்தின் கீழ் 20 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது" என்று தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் ஒருங்கிணைப்பு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது செயல்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறைகளை தொழிலாளர் அமலாக்க அதிகாரிகள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், பிராந்திய தொழிலாளர் நல ஆணையர்கள் மற்றும் அந்தந்த பிராந்தியங்களின் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் நிர்வகிக்கின்றனர். அனைத்து 20 கால் சென்டர்களின் செயல்பாடுகளையும் தினசரி அடிப்படையில் தலைமை தொழிலாளர் ஆணையர் (சி) கண்காணித்து மேற்பார்வையிடுவார் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மற்றும் கால்சென்டர்களில் பணியாற்றுவோர் பதிப்படைந்தவர்களிடம் மனிதாபிமான உள்ளத்துடன் தரமான சேவையை தொண்டு உள்ளத்துடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தொழிலாளர் அமைச்சகம் எந்த ஒரு தொழிலாளியையும் வேலையை விட்டு நீக்கக் கூடாது என்றும் ஊதியம் குறைக்கக் கூடாது என்றும் நிறுவன முதலாளிகளுக்கு ஆலோசனை அளித்திருந்தது குறிபிடத்தக்கது.

Source: https://www.livemint.com/politics/policy/govt-sets-up-20-control-rooms-to-address-wage-related-issues-workers-plight-11586850711342.html 

Similar News