ஏப்ரல் 20ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றுக்கு விலக்கு - அவை என்னென்ன.? பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!

ஏப்ரல் 20ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றுக்கு விலக்கு - அவை என்னென்ன.? பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!

Update: 2020-04-14 04:55 GMT

மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அதில், கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 1 வாரம் மிகவும் முக்கியமானது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு எனும் கவசத்தை தற்போது நாம் துறக்க முடியாது

ஏப்ரல் 20ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றுக்கு விலக்குகள் வழங்கப்படும். ஏப்ரல் 20 முதல் விலக்கு அளிக்கப்படும் பணிகள் குறித்து நாளை அறிவிக்கை வெளியிடப்படும்

ஏப்ரல் 20முதல் ஊரடங்கின் நிலை படிப்படியாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் 20ந் தேதி வரை ஊரடங்கை முழு மூச்சாக மக்கள் கடைபிடிக்க வேண்டும்

ஏப்ரல் 20ந் தேதி சில பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் தொடரும். ஏப்ரல் 20ந் தேதி முதல் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும், அப்போது நிபந்தனைகள் மீறப்பட்டால் விதி விலக்கு வாபஸ் பெறப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News