மாஸ்கோவில் மாட்டி கொண்ட 200 தமிழக மாணவர்களை மீட்டு வந்த சோனு சூட் - குவியும் பாராட்டுக்கள்.!

மாஸ்கோவில் மாட்டி கொண்ட 200 தமிழக மாணவர்களை மீட்டு வந்த சோனு சூட் - குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-08-06 07:05 GMT

பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் அவருடைய சொந்தப் பணத்தில் பல உதவிகளை செய்து வருகிறார். சோனு சூட் முதலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு சமயத்தில் அவர்களின் சொந்த ஊருக்கு பஸ் ரயில் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்பு ஆந்திராவில் உள்ள ஒரு விவசாயிக்கு டிராக்டர் வாங்கி பரிசாக கொடுத்தார். பின்பு காய்கறி விற்றுவந்த பொறியியல் பட்டதாரிப் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் மாட்டிக்கொண்ட 200 தமிழக மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னைக்கு மீட்டு வந்து உதவி செய்துள்ளார். மாஸ்கோவில் மருத்துவப் படிப்பு படித்து வந்த 200 மாணவர்கள் அவர்களுடைய படிப்பு காலம் முடிந்தபின் சொந்த நாடுக்கு முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து சோனு சூட்டுக்கு இவர்களுடைய நிலைமையைப் பற்றி இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.

இதன் பின்பு அவர்களை தொடர்பு கொண்டு பேசிய சோனு சூட் தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்கள் அனைவரையும் நேற்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதில் 110 பேர் இதற்கு முன்பே விமான டிக்கெட்டை பெற்றிருக்கின்றனர் மற்றும் மீதி உள்ள 90 பேருக்கு இவருடைய சொந்த செலவில் கட்டணத்தை செலுத்தி அழைத்து வந்துள்ளார்.

சோனு சூட்டுக்கு 200 மாணவர்களும் வாழ்த்துக்களையும் மற்றும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர். 

Similar News