2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது!

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது!

Update: 2020-01-10 12:13 GMT

2020 ஆம் ஆண்டு மட்டும் நான்கு முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது அதன் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது,இன்று இரவு 10.37 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம் நாளை அதிகாலை 2.42 மணி வரை நடைபெறுகிறது.



முழுமையான அளவு ,பாதி, மற்றும் பெனும்ப்ரல் வகை என மூன்று வகையான சந்திர கிரகணம் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகை என தெரிவிக்கப்பட்டுள்ளது, எந்த வகை சந்திர கிரகணத்தில் பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே சந்திரனில் விழுவதால் இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


 இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் அடுத்தது இந்த ஆண்டு ஜூன் 5 ஜூலை 5 மற்றும் நவம்பர் 30ம் தேதிகளில் அடுத்த சந்திர கிரகணம் நிகழும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 





Similar News